ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
சென்னையில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஆட்டோ டிரைவரான இவருக்கும், மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதி என்பவருக்கும் சவாரி ஏற்றுவதில் கடந்த 2010-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் செல்வக்குமாரை கருணாநிதி கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர். இந்த வழக்கை சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வக்கீல் டி.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் கருணாநிதிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.