கைதிகளுக்கு ரூ.10 ஆயிரம் புத்தகங்கள்
கைதிகளுக்கு ரூ.10 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.;
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் (கைதிகள்) சிறையில் உள்ள நூலகத்தில் அறிவுப்பூர்வமான புத்தகங்களை படித்து பொது அறிவை வளர்த்திடவும், தங்கள் வாழ்க்கை பயணத்தை நன்மையான வழியில் செயல்படுத்தவும் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பின் கீழ் சிறை வளாகத்தில் புத்தக தானம் சேகரிக்கும் இடம் அமைந்துள்ளது. இதில் பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற புத்தகங்களை சிறைக்கு தானமாக வழங்கி வருகின்றனர். சிறைவாசிகள் தாங்கள் செய்யும் குற்ற செயல்களில் இருந்து மனம் திருந்தி மறுவாழ்வு வாழ அவர்கள் புத்தகம் படிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், திருச்சி சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நேற்று வழங்கினார். அப்போது திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு ஆண்டாள் உடனிருந்தார்.