ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டு

ஜோலார்பேட்டை அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை அலுவலர் வீட்டில் ரூ.4 லட்சம் மற்றும் 10 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-08-30 19:39 GMT

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை அலுவலர் வீட்டில் ரூ.4 லட்சம் மற்றும் 10 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடிச்சென்று விட்டனர்.

நகை- பணம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் ஊராட்சி சகல தெருவில் வசிப்பவர் சந்திரன் (வயது 67). இவர் போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலா (60). இவர்கள் இருவரும் கடந்த 27-ந் தேதி இரவு பெங்களூரில் நடைபெற்ற உறவினரின் உணவு விடுதி திறப்பு விழாவிற்கு சென்றுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து நேற்றுமுன்தினம் ஊருக்கு திரும்பினர். அப்போது வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.4 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சந்திரன் உடனடியாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்