10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்

70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது;

Update:2022-05-22 23:48 IST

நாகப்பட்டினம்:-

நாகை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.

இதில் துணைத்தலைவர் சூரியமூர்த்தி, அமைப்பு செயலாளர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் வேலுசாமி நன்றி கூறினார். வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலாக உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி 100 சதவீதத்தை ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு அறிவிக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல் மாநில அரசும் ரூ.1,000 மருத்துவப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்