கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் ஆகியவை விற்பனை செய்த கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பீட்டர் (வயது 55), பீர்பள்ளி சரவணன் (40), நேரலகிரி உண்ணாமலை (40), பாரூர் சஞ்சீவி (68), ஓசூர் சாந்தி நகர் காஞ்சனா (45), கோவிந்த அக்ரஹாரம் வெங்கட் (35), கொத்தூர் முருகன் (47) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,325 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மிட்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த பார்த்திபன் (22) என்பவரையும், சிப்காட் பேடரப்பள்ளி ஏரிக்கரை அருகில் கஞ்சா வைத்திருந்த பேடரப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்த பிரதீப் (21) என்பவரையும், ஓசூர் கொத்தூரை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.