திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 பேருக்கு தலா ரூ.10 லட்சம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 பேருக்கு பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தில் தலா ரூ.13 லட்சம் வழங்கப்பட்டது.

Update: 2022-05-30 16:37 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பலர் இறந்தனர். இதில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளும் உள்ளனர். இதுபோன்று பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தில் தலா ரூ.10 லட்சம் வழங்கும் விழா நாடு முழுவதும் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

அதன்படி குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் தபால் நிலையத்தில் செலுத்தப்பட்ட சான்றிதழ், ரூ.5 லட்சத்துக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் பிரதமர் நரேந்திரமோடியின் கடிதம் ஆகியவற்றை கலெக்டர் விசாகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்