தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் வெளியீடு

தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் வெளியிடப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-03-16 08:00 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் கோரப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் தென்காசி குண்டாறு அணை, கரூர் பொன்னையாறு அணை ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளன. 2022 - 23 சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ரூ.2.87 கோடியில் முட்டுக்காடு கடற்கரை, ரூ.2.85 கோடியில் பூண்டி அணைக்கட்டு சுற்றுலா தலத்தை மேம்படுத்தப்பட உள்ளது.

ரூ.2.7 கோடியில் முட்டம் கடற்கரை, ரூ.4 கோடியில் திற்பரப்பு அருவியை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்