சொகுசு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேங்காப்பட்டணத்தில் சொகுசு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-06-29 18:45 GMT

புதுக்கடை:

தேங்காப்பட்டணத்தில் சொகுசு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர்கள் ஜோதிஷ்குமார், ரதன் ஆகியோர் நேற்று மதியம் கருங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனாலும் டிரைவர் கரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தில் அந்த காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர்.

15 கி.மீ. துரத்தி பிடித்தனர்

ஆனாலும் கார் நிற்காமல் பாலூர், தொழிக்கோடு, கீழ்குளம், இனயம் வழியாக வேகமாக சென்றது. விடாமல் துரத்தி சென்ற அதிகாரிகள் 15 கிேலா மீட்டர் தூரம் சென்று தேங்காப்பட்டணத்தில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். அதற்குள் டிரைவர் காரில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டார்.

அதைதொடர்ந்து காரில் சோதனை செய்ததில் 1 டன் ரேஷன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அரிசியை கேராளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சொகுசு கார் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காட்டில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

சினிமா பட பாணியில் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காரை மடக்கி பிடித்து 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்