காரில் வைத்திருந்த ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கொள்ளிடம் அருகே விற்பனைக்கு கொண்டு செல்ல காரில் வைத்திருந்த ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

Update: 2022-11-08 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே விற்பனைக்கு கொண்டு செல்ல காரில் வைத்திருந்த ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

காரில் இருந்த புகையிலை பொருட்கள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமம் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் முகமது யாசின்(வயது 44). இவர், வெளியூர்களில் உள்ள கடைகளுக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் தனிப்படை போலீசார் தைக்காலுக்கு சென்று சோதனையிட்டபோது அவருக்கு சொந்தமான காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும், அவற்றை கடைகளுக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரிய வந்தது.

கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யாசினை கைது செய்தனர். மேலும் காருக்குள் 14 மூட்டைகளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்