சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்பு

மதுரையில் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வது என முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-28 19:15 GMT


மதுரையில் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வது என முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை முத்து மகாலில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துைண பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளர்கள் செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, ராஜன் செல்லப்பா, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி, மகளிர் அணி செயலாளர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஒரு லட்சம் பேர் பங்கேற்க முடிவு

இதில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உமாதேவன், நாகராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் கொத்தங்குளம் கருப்பையா, பில்லூர் ராமசாமி, மாரிமுத்து, கோமதிதேவராஜ், பாக்கியலெட்சுமி அழகுமலை, மகேஸ்வரி செல்வராஜ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, நிர்வாகிகள் நகர், ஒன்றிய, பேரூர் கழக, ஊராட்சி கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெறும் எழுச்சி மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்