தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் ஆன்லைனில் ரூ.1¾ லட்சம் மோசடி

ராசிபுரம் அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் ஆன்லைனில் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-27 18:45 GMT

தனியார் நிறுவன ஊழியர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் தீபன் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி உள்ளார். அப்போது வந்த லிங்க்கை கிளிக் செய்தபோது, அவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. முதல் இருமுறை அவர் டாஸ்கில் வெற்றி பெற்றதால், அவரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளனர்.

ரூ.1.71 லட்சம் மோசடி

பின்னர் நடந்த டாஸ்கில் பங்கேற்க ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 939 கட்ட வேண்டும் என ஆன்லைன் மூலமாக தெரிவித்து உள்ளனர். இதை உண்மை என நம்பி கட்டி உள்ளார். ஒரு கட்டத்தில் கட்டிய பணத்தை திரும்ப கேட்டபோது, மேலும் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

இதனால் தன்னிடம் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த தீபன் இது குறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்