1 கிலோ கஞ்சா பறிமுதல்

பட்டுக்கோட்டையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-04 19:24 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரோந்து பணி

பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நாடியம்மன் கோவில் சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

1 கிலோ கஞ்சா

விசாரணையில் அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்து இருந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர், மல்லிப்பட்டினம் கே. ஆர்.காலனி பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் (வயது 52) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலத்தை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்