421 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

எஸ்.குளவாய்பட்டியில் மக்கள் ெதாடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

Update: 2023-09-13 18:44 GMT

ஆலங்குடி அருகே எஸ்.குளவாய்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். ஆலங்குடி தாசில்தார் வரவேற்று பேசினார். முகாமில் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மரக்கன்றுகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முகாமில், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் சுயஉதவிக்குழு உள்ளிட்ட துறைகளின் சார்பில், 421 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 18 ஆயிரத்து 383 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஸ்ரீதர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், எஸ்.குளவாய்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் நளினி பாரதிராஜா, சேந்தாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், ஆலங்குடி சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ராஜேஸ்வரி, குடிமைப் பொருள் தாசில்தார் பெரியநாயகி, அலுவலக பணியாளர்கள், வெண்ணாவல்குடி வருவாய் ஆய்வாளர் மற்றும் குளவாய்பட்டி கிராம நிர்வாக அலுவலர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்