213 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி கடன் உதவி
கிழக்கு ராஜபாளையம் கூட்டுறவு சங்கத்தில் 213 பேருக்கு ரூ.1½ கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே உள்ள கிழக்கு ராஜாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆத்தூர் சரக கூட்டுறவு மேற்பார்வையாளர் ரமேஷ், கூட்டுறவு கள அலுவலர் வில்லவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆத்தூர் சரக கூட்டுறவு துணைப் பதிவாளர் கந்தன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் கடன் உதவி, 193 விவசாயிகளுக்கு 1 கோடியே 49 லட்சம் கடன் உதவி என மொத்தம் 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க இயக்குனர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் அனுசுயா நன்றி கூறினார்.