தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி

வங்கியில் ஏலத்துக்கு வரும் நகைகளை விற்று லாபம் பெறலாம் எனக்கூறி தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-07-27 19:35 GMT

வங்கியில் ஏலத்துக்கு வரும் நகைகளை விற்று லாபம் பெறலாம் எனக்கூறி தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொழிலதிபர்

திருச்சி பழைய பால்பண்ணை மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் முகமதுஅப்துல்லா (வயது 36). தொழிலதிபரான இவர் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பொன்னரில் உள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கியில் பணியாற்றும் அன்வர் என்பவர் முகமதுஅப்துல்லாவிடம் அதே வங்கியில் பணியாற்றிய மணப்பாறை வாகைகுளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்த், மோகன் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இவர்கள் 3 பேரும் வங்கியில் அடகு நகைகள் ஏலத்துக்கு வருவதாகவும், அதை ஏலம் எடுத்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் முகமதுஅப்துல்லாவிடம் கூறி உள்ளனர். இந்த வார்த்தையை நம்பி அவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடியே 13 லட்சத்து 69 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை கொடுக்காமல் மிரட்டல்

இதையடுத்து 3 பேரும் சேர்ந்து முகமதுஅப்துல்லாவுக்கு நகைகளை வெளிமார்க்கெட்டில் விற்றதாக கூறி லாபத்தொகையாக ரூ.92 லட்சத்து 72 ஆயிரத்தை கொடுத்தனர். மீதமுள்ள ரூ.1 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து முகமதுஅப்துல்லா கேட்டபோது, அவருக்கு பணத்தை தராமல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து முகமதுஅப்துல்லா மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், லெட்சுமிகாந்த், மோகன், அன்வர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்