ரூ.1 கோடியில் தூய்மை பணி மின்கலன் வாகனங்கள்

திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் தூய்மை பணி மின்கலன் வாகனங்கள் கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-06 21:02 GMT

திருவையாறு:

திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் 26 மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார தூய்மை பாரத இயக்க அமைப்பாளர் சசிகுமார் ஸ்டாலின் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்