தாசில்தாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
தாசில்தாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
தொண்டி
திருவாடானை அருகே உள்ள கோனேரிகோட்டை கிராமத்தில் தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் துறை காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 44), கீழவண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன்(50) ஆகியோர் தாசில்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக திருவாடானை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் திருவாடானை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.