மாயமான தொழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார்

முத்துப்ே்பட்டை அருகே மாயமான ெதாழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-14 18:48 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்ே்பட்டை அருகே மாயமான ெதாழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் பிணமாக கிடந்தார்

முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முனியசாமி (வயது 55) விவசாய கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வெளியே சென்ற முனியசாமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள அலங்காரம் குளத்தில் ஓருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் குளத்தில் இருந்து உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

போலீசார் விசாரணை

அப்போது குளத்தில் பிணமாக கிடந்தவர் மாயமான முனியசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது அவரை யாராவது கொலை செய்து உடலை குளத்தில் வீசி சென்றனரா? என பல்ேவறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்