பள்ளி செல்லாததை தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை

குன்னம் அருகே பள்ளி செல்லாததை தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-29 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45), விவசாயி. இவரது மனைவி செந்தமிழ் செல்வி (38). இவர்களது மூத்த மகன் ஆகாஷ் கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் ஆகாஷ் கடந்த 10-ந் தேதி முதல் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதை அறிந்த செந்தில்குமார் தனது மகனை கண்டித்ததாக தெரிகிறது.இதில் மனமுடைந்த ஆகாஷ் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட ஆகாஷிற்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்