ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை அடையாளம் தெரிந்தது

Baby girl found dead in lake identified

Update: 2022-11-15 18:55 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் பச்சிளம் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் கயல்விழிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த குழந்தை பிறந்து ஒருவாரமேயான பச்சிளம் பெண் குழந்தை என்பதும், குளத்தில் வீசப்பட்டதால் அந்த குழந்தையின் தலை மற்றும் உடலை மீன்கள் தின்றது தெரியவந்தது. மேலும் குழந்தையை ஏரியில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?, தவறாக பிறந்த குழந்தையா? அல்லது முன் விரோதம் காரணமாக பிறந்த குழந்தையை ஏரியில் போட்டு யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் 10 நாட்களுக்குள் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் அவர்களின் முகவரி ஆகியவற்றை வாங்கிய போலீசார் முகவரியை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இறந்துகிடந்த குழந்தை சிலால் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் குழந்தை என தெரியவந்தது. பிரசவத்திற்காக ரவியின் மனைவி அனிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்தே பிறந்ததும், இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இறந்த குழந்தையை ஏரியில் வீசியதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்