பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

BJP protest against milk price hike

Update: 2022-11-15 18:45 GMT

தமிழகம் முழுவதும் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் இளையராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்