தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-15 18:45 GMT

தியாகதுருகம் கிருஷ்ணா நகர் பழைய மணியக்கார தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் ருத்தீஷ் (வயது 23). கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக இவரை தியாகதுருகம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளன. இவரின் இத்தகைய செயலை கட்டுப்படுத்தும் வகையில், ருத்தீசை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ருத்தீசை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷ்ரவன்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ருத்தீசை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்