சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.;
சென்னை,
தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கனழை பெய்தது. நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சூளைமேடு, கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.