ரெயில் டிக்கெட்டில் போலி

ரெயில் டிக்கெட்டில் போலி டிக்கெட்டுகளை விற்றதாக கணினி மைய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-14 17:55 GMT

புதுக்கோட்டையில் கணினி மையம் நடத்தி வருபவர் தட்சிணாமூர்த்தி (வயது 42). இவர் ரெயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தது போல போலியான டிக்கெட்டுகளை விற்றதாக மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்போில் தட்சிணாமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் திருச்சி-சென்னை மற்றும் சென்னை- திருப்பதிக்கான ரெயிலில் 8 பயணிகளுக்கு போலியான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளை விற்றது தெரியவந்துள்ளது. அவர் போலியான டிக்கெட்டுகளை விற்றது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்