அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை

Update: 2022-06-21 02:20 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர நாளை முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 7 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்