அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல்
மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை,
திருவனந்தபுரம் – மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா விரைவு ரெயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ரெயிலானது, திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, ராமேசுவரத்துக்கு மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.