வயர்லெஸ் கேமிங் கீ போர்டு

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ரிடிராகன் நிறுவனம் புதிதாக வீடியோ கேம் பிரியர்களுக்கென ஆர்.ஜி.பி. விளக்கு வசதி கொண்ட வயர்லெஸ் கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது. கே 616 பிஸ்புரோ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.

Update: 2023-03-09 16:06 GMT

இது மூன்று விதமான இணைப்பு வசதி களைக் கொண்டுள்ளது. வீடியோகேம் பிரியர்களுக்கென கீ போர்டின் பொத்தான்களை இலகுவாக செயல்படுத்தும், நிகரலை கேமிங் விளையாடுவதற்கு ஏற்ப பொத்தான்களைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதில் உள்ள 61 பொத்தான்கள் எளிதில் செயல்படுத்தும் விதமாக அதிக இடைவெளி யுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இது எடை (230 கிராம்) குறைவானது. கீ போர்டின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த கீ போர்டின் விலை சுமார் ரூ.3,990.

Tags:    

மேலும் செய்திகள்