ஹைட்ரா 10 வயர்லெஸ் கீ போர்டு
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் வயர்லெஸ் கீ போர்டை ஹைட்ரா 10 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை சுமார் ரூ.2,999. இது ஆர்.பி.ஜி. விளக்குகளைக் கொண்டது. வீடியோகேம் பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதில் உள்ள சிவப்பு நிற பொத்தான்கள் விரைவான செயல்படுத்தலுக்கு ஏற்றவை. இதில் 1,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட ரீ சார்ஜபிள் பேட்டரி உள்ளது. வெள்ளை நிறத்தில் வந்துள்ளது.