தினமும் 'லூபா' பயன்படுத்தலாமா?

லூபா எனப்படும் பஞ்சு போன்ற மென்மை தன்மை கொண்ட இழையை குளியலுக்கு பலரும் பயன்படுத்து கிறார்கள். உடலை நன்றாக தேய்த்து சுத்தப் படுத்துவதற்கு உதவும் இந்த பொருள் குளியல் அறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும்.;

Update: 2022-06-26 13:38 GMT

லூபா இல்லாமல் குளிக்க முடியாது என்ற அளவுக்கு அதனை பயன்படுத்துவதற்கு பலரும் பழகிவிட்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் குளிக்கும்போது லூபா பயன்படுத்துவது நல்லதல்ல என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. உடலில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை துடைத்து எடுப்பதற்கு லூபா பயன்படும் என்றாலும் பாக்டீரியா, பூஞ்சை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

லூபாவின் இழை பகுதியில் பாக்டீரியாக்கள் படிந்துவிடும். ஒவ்வொருமுறையும் குளிக்கும்போது லூபாவை சரியாக உலர வைக்காவிட்டால் அதில் இருக்கும் ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் எளிதாக வளர தொடங்கி விடும்.

பின்பு குளிக்கும்போது அவை உடலில் ஊடுருவி சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். சிலருடைய சரும வகைக்கு லூபா ஒத்துக்கொள்ளாது. அதனை பயன்படுத்தும்போது சருமம் சிவத்தல், எரிச்சல் உணர்வு போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்த்துவிடுவதே சிறந்தது. இப்போது லூபாக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தும்போது நாளடைவில் சருமத்திற்கு சேதம் ஏற்படலாம்.

குளியல் அறை என்பது ஈரப்பதமான பகுதி. குளித்து முடித்ததும் லூபாவை அங்கேயே வைத்திருந்தால் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடனே இருக்கும். மறுநாள் பயன்படுத்தும்போது உலர்வடைந்திருப்பது போல் தெரிந்தாலும் பாக்டீரியாக்களின் புகலிடமாக மாறிக்கொண்டிருக்கும். லூபாவை பயன்படுத்தி முடித்ததும் வெயிலில் உலர்த்துவதுதான் சரியானது. தினமும் பயன்படுத்துவதும் நல்லதல்ல.

Tags:    

மேலும் செய்திகள்