ஹேய்ர் ஏர் கண்டிஷனர்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் ஹெவி டூட்டி ஏர் கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது.
எதிர்வரும் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் 10 விநாடிகளில் குளிர்ச்சியை தரும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று இன்வெர்ட்டர் பிளஸ் தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதில் பிராஸ்ட் செல்ப் கிளீன் தொழில்நுட்பம் உள்ளது.
இது தானியங்கி முறையில் குளிர்ச்சியான காற்றைத் தருவதோடு காற்றில் பரவும் கிருமிகளை வடிகட்டிவிடும். மேலும் பனிக்கட்டி ஏற்படு வதையும் இது தடுத்து விடும். இது 1.6 டன் திறன்கொண்டது. குறைந்த பட்ச அளவாக 0.8 டன் அளவு கொண்ட ஏர்கண்டிஷனர் கிடைக்கும். இது மின்சாரத்தை குறைவாக நுகரும். அலெக்ஸா மற்றும் கூகுள் ஹோம் மூலம் இதை குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.47,990 முதல் ஆரம்பமாகிறது.