ஜிஸ்மோர் ஸ்மார்ட் கடிகாரம்

ஜிஸ்மோர் நிறுவனம் புதிதாக குளோ லக்ஸ் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-10-27 14:49 GMT

இது அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. சொகுசான, ஆடம்பர தோற்றத்தை அளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1.32 அங்குல வட்ட வடிவிலான டயலைக் கொண்டது.

மிருதுவான தோல் ஸ்டிராப் மற்றும் ஸ்டெயின் லெஸ் ஸ்டிராப்புகளைக் கொண்டது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 15 நாட்கள் வரை இதன் பேட்டரி நீடித்திருக்கும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படும். இதன் மேல்பாகம் துருப்பிடிக்காத துத்தநாக அலாய் உலோகத்தால் ஆனது. கருப்பு, பிரவுன், சில்வர், நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,499.

Tags:    

மேலும் செய்திகள்