காடுகள் அழிப்பை தடுக்கலாம்..!

மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டேயில் பாதுகாக்கப்பட்ட 5 காடுகளின் தலைமைக் காவலராக நிஜியிம்பா என்பவர் பணியாற்றுகிறார்.;

Update:2022-08-18 21:32 IST

 கடந்த 20 ஆண்டுகளாக காடுகளைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து இவர் பணியாற்றி வருகிறார். காட்டை கண்காணிக்கவும், பதிவு செய்யவும் விண்வெளி தொழில்நுட்பமான ஒருங்கிணைந்த மேலாண்மை செயல்திறன் கருவியை சிறப்பு அனுமதியுடன் உருவாக்கி, அதை இவர் பயன்படுத்தி வருகிறார். அதன்மூலம் காடு அழிப்பு செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து, காட்டையும், மரங்களையும் காப்பாற்றுகிறார்.

சுற்றுச்சூழல் பணிக்காகவே இந்தக் கருவி உருவாக்கப்பட்டது. இதை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க, கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளின் 79 உறுப்பு நாடுகளின் அமைப்பு ஆதரிக்கிறது.

இது குறித்து நிஜியிம்பா, "செயற்கை கோள்களை பயன்படுத்துவது, பலருக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் நல்ல தரவுகளைச் சேகரிப்பதற்கும், அந்த தரவை பகுப்பாய்வு செய்வதற்கும், காடுகளை செயற்கை கோள் வாயிலாக கண்காணிக்கவும் இந்தக் கருவியை பயன்படுத்து கிறோம்" என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் காடுகளில் 2.5 கோடி ஏக்கர் அளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடு அழிப்பைக் குறைப்பதன் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைக்கலாம், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடலாம் என்கிறது, உலக வனவிலங்கு நிதியம்.

Tags:    

மேலும் செய்திகள்