விளையாட்டு வீரர்களுக்கு பணி
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 322 தலைமை காவலர் பணி இடங்கள் விளையாட்டு துறையினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தேசிய விளையாட்டு, தேசிய சாம்பியன்ஷிப் (ஜூனியர் & சீனியர் இரண்டும்) போன்ற அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு பதக்கம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
18 முதல் 32 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். உடல் தகுதி தேர்வு, விளையாட்டு சார்ந்த தேர்வு, மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-12-2022.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://crpf.gov.in/recruitment-details.htm?242/AdvertiseDetail என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.