"கேப்ஸ்டோன்" செயற்கைகோள் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணம் - நாசா சாதனை!

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, "கேப்ஸ்டோன்" செயற்கைகோளை விண்ணில் ஏவியது.

Update: 2022-07-05 08:44 GMT

Image Courtesy : NASA

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, 25 கிலோ எடை கொண்ட "கேப்ஸ்டோன்" செயற்கைகோளை கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவியது.

'ராக்கெட் லேட்' மற்றும் 'அட்வான்ஸ்ட் ஸ்பேஸ்' ஆகிய நிறுவனங்களுடன் இணந்து நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டின் மூலம், "கேப்ஸ்டோன்" செயற்கைகோள் ஏவப்பட்டது.

பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்வே என்ற விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் இறங்கு திட்டம் வகுத்துள்ளது.

புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது. மேலும் செயற்கைகோள் அல்லது விண்வெளி நிலையம் பூமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்