கொரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்-நடிகை கீர்த்தி சுரேஷ் விழிப்புணர்வு வீடியோ
நம்மையும் காப்போம், நாட்டு மக்களையும் காப்போம் என்று வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சென்னை
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், நடிகை கீர்த்திசுரேஷ், எல்லோருக்கும் வணக்கம், நான் கீர்த்தி சுரேஷ் பேசுகிறேன்.. கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நாமே, சின்ன சின்ன விதிமுறைகளை முழுமையாக பாலோ செய்தால் போதும்.
தேவை இல்லாமல் வெளியே போகாதீங்க, அப்படியே போனாலும் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள், அவசியமான இடங்களில் டபுள் மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். சமூக இடைவெளியை கடை பிடியுங்கள், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
அரசு சொல்கிற அனைத்து விதிமுறைகளையும் கடைபிடியுங்கள். நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டேன். நீங்கள் எடுத்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக எடுத்து கொள்ளுங்கள். இதை தான் தமிழ் நாடு அரசும், சுகாதாரத்துறையும் வலியுறுத்துகிறது. இதை பாலோ பண்ணி, நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவேண்டியது நம்முடைய கடமை. கொரோனவை வெல்வோம்... கொரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் . நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என அந்த விழிப்புணர்வு வீடியோவில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோவில், நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ், நடிகர் சிவகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
Stay Home Stay safe ❤
— #KeerthyFansPage (@KeerthyFansPage) May 25, 2021
@KeerthyOfficial#KeerthySureshpic.twitter.com/Cjh0fRUp7X