ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த கிருஷ்ணா பிரசாத் தெலுங்கு தேசத்தில் இணைந்தார்

தனது தொகுதிகளுக்கு சேவை செய்ய வேண்டும் மற்றும் ஆந்திரவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதால் தெலுங்கு தேசத்தில் இணைந்ததாக வசந்த கிருஷ்ணா பிரசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-02 08:47 GMT

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் எம்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள மைலவரம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இருந்தவர் வசந்த கிருஷ்ணா பிரசாத். இன்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கு தேசத்தில் இணைந்துள்ளார்.

தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த கிருஷ்ணா அவரது தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கு தேசத்தில் இணைந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், "ஆந்திரவை வளர்ச்சியை நோக்கிச் செல்லவும், தொழில்களை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நாயுடுவுக்குத் திறன் உள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்த போது மைலவரம் தொகுதியின் வளர்ச்சிக்கான அங்கீகாரம் மற்றும் நிதி இல்லாததால் பெரும் ஏமாற்றம் கிட்டியதாகவும், பல கோரிக்கைகளை முன்வைத்தும், தொகுதியின் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. தனது தொகுதிகளுக்கு சேவை செய்ய வேண்டும் மற்றும் ஆந்திரவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதால் தெலுங்கு தேசத்தில் இணைந்தேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்