"ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்" கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு

அக்கட்சியின் கவுரவத் தலைவராக இருந்து வந்த ஜெகனின் தாயார், அப்பதவியை ராஜினாமா செய்தார்.

Update: 2022-07-09 13:10 GMT

அமராவதி,

"ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்" கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திர பிரதேச முதல்-மந்திரியான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, "யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்)" கட்சியின் வாழ்நாள் தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்கட்சியின் இரண்டு நாள் பொதுக்கூட்டத்தின் நிறைவு நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, 2011 மார்ச்சில் காங்கிரஸில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஜெகன் நிறுவினார். அன்றிலிருந்து அவர் கட்சியின் தலைவராகவும், அவரது தாயார் விஜயம்மா கவுரவத் தலைவராகவும் இருந்து வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து ஜெகன் கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது தாயார் விஜயம்மா வெள்ளிக்கிழமை அன்று தனது கவுரவத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜயம்மா இதை மறுத்துள்ளார். அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 'ஒய்எஸ்ஆர் தெலுங்கானா' கட்சிக்கு தலைமை தாங்கும் தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர்சியில் இருந்து விலகுவதாகக அவர் கூறினார்.

அடுத்த கட்டமாக, ஜெகன் மோகன் ரெட்டி, வாழ்நாள் முழுவதும் கட்சித் தலைவராக இருக்க, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தரப்பில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி ஒப்புதலைப் பெற வேண்டும்.

இதற்கிடையே, மறைந்த தனது தந்தையும் முன்னாள் முதல் மந்திரியுமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜெகன் அஞ்சலி செலுத்தினார்.


ஒய்எஸ்ஆர் என்று அழைக்கப்படும் எடுகுரி சண்டிந்தி ராஜசேகர ரெட்டி, ஆந்திரப் பிரதேசத்தின் 14வது முதல் மந்திரியாக 2004 முதல் 2009 வரை பதவி வகித்தார். இன்றும், பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மக்கள், தங்களுக்கு உதவுவதற்காக அவர் உயிருடன் திரும்பி வருவதைக் காண ஏங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்