இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது
பெங்களூருவில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சாகர் (வயது 31) என்பவரை கைது செய்துள்ளனர். இவர், நகரில் வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடுவார். பின்னர் அந்த மோட்டாா் சைக்கிளில் சில நாட்கள் வலம் வருவதுடன், சாகசங்கள் செய்வதற்காக சாகர் பயன்படுத்துவார்.
அதன்பிறகு, அந்தமோட்டார் சைக்கிள்களை விற்று கிடைக்கும் பணத்தை சாகர் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார். அவரிடம் இருநது ரூ.11½ லட்சம் மதிப்பிலான 8 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. கைதான சாகர் மீது ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.