உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தை: ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளியது இந்தியா

இந்திய பங்குச்சந்தைகளின் மூலதனம் கடந்த மாதம் 5-ம் தேதி முதல் முறையாக 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது.;

Update:2024-01-23 14:48 IST

மும்பை,

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, சர்வதேச முதலீட்டாளர்களின் உலகளாவிய சந்தையாகவும் முன்னிலை வகிக்கிறது. ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா தற்போது மற்றொரு முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது, தெற்காசிய நாடுகளின் இந்திய பங்குச்சந்தை முதல் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன் மூலம் உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது.

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் படி, இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கூட்டு மதிப்பு நேற்றைய நாள் முடிவில் 4.33 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது. ஹாங்காங் சந்தைகளின் கூட்டு மதிப்பு 4.29 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதன் மூலம் இந்தியா உலக அளவில் 4-வது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகளின் மூலதனம் கடந்த மாதம் 5-ம் தேதி முதல் முறையாக 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது. இதில் பாதியளவு கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்