யூடியூபில் இருந்து 22 லட்சம் வீடியோக்கள் நீக்கம்: உலக அளவில் இந்தியா முதலிடம்

3 மாதங்களில் 90 லட்சத்துக்கு மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கி உள்ளது.

Update: 2024-03-27 21:35 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரான உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கி வருகிறது. குறிப்பாக தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தான உள்ளடக்கம், குழந்தை பாதுகாப்பு விதிமீறல், வன்முறை அல்லது கிராபிக் உள்ளடக்கம், நிர்வாணம் மற்றும் பாலியல் உள்ளடக்கம், தவறான தகவல் உள்ளிட்டவை தொடர்பான வீடியோக்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 90 லட்சத்துக்கு மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கி இருக்கிறது. இதில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. அதாவது இந்த 3 மாதங்களில் 22,54,902 இந்திய வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன. அடுத்ததாக 12,43,871 வீடியோக்களுடன் சிங்கப்பூர் 2-வது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக அமெரிக்கா (7.88 லட்சம்), இந்தோனேசியா (7.70 லட்சம்), ரஷியா (5.16 லட்சம்) போன்ற நாடுகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்