கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு: தண்டனை குறைக்கப்பட்ட 11 பேருக்கு மீண்டும் தூக்கு - சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு வாதம்

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கான தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குஜராத் ஐகோர்ட்டு குறைத்திருந்தது.;

Update:2023-02-21 02:11 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

குஜராத்தின் கோத்ராவில் 2002-ம் ஆண்டு சபர்மதி ரெயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்டனர். இது குஜராத் கலவரத்திற்கு காரணமானது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 63 பேரை விடுவித்தும் விசாரணை நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

பின்னர் 11 பேருக்கான தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குஜராத் ஐகோர்ட்டு குறைத்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அப்துல் ரஹ்மான் தாண்டியா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது.

"குஜராத் அரசின் கொள்கைகளின் படி, கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோர முடியாது, கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்" என்று குஜராத் அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்