உயர்கல்வி நிறுவனங்களில் காலியிடங்கள் நிரப்பப்படும் - மத்திய கல்வி மந்திரி தகவல்

உயர்கல்வி நிறுவனங்களில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-15 00:23 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்குமாறு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்ட தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:- 'பிரதமர் மோடியின் முடிவின்படி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பும் நடவடிக்கையில் மத்திய கல்வி அமைச்சகமும், திறன் மேம்பாட்டுத் துறையும் ஈடுபடும். இதன்படி, உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், பிற பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். 10 லட்சம் பேருக்கு வேலை வழங்குவது, ஒரு குறிப்பிடத்தக்க, மக்கள்நலன் சார்ந்த முடிவாகும். இது நாட்டில் வேலைவாய்ப்புச் சூழலை மேலும் வலுப்படுத்துவதோடு, இந்திய இளைஞர்களுக்கு அதிக மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கும்.' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்