காட்டு யானைகள் நடமாட்டம் எதிரொலி: எத்தினபுஜா மலைப்பகுதியில் மலையேற்றம் செல்ல தடை

காட்டு யானைகள் நடமாட்டத்தால் எத்தினபுஜா மலைப்பகுதியில் மலையேற்றம் செல்ல தடை விதித்து வனத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-09-11 15:05 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெேர தாலுகாவில் எத்தினபுஜா மலைப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலா தலமாக விளங்கும் இங்கு மலையேற்றமும் நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் எத்தினபுஜா மலைப்பகுதிக்கு வந்து மலையேற்றம் சென்று வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளை மலையேற்றம் அழைத்து செல்ல ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எத்தினபுஜா மலைப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் அந்த யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ஜூன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் எத்தினபுஜா மலைப்பகுதியில் மலையேற்றம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இங்கு மலையேற்றம் செல்ல அனுமதி கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு மலையேற்றம் செல்ல வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்