சார்ஜிங் செய்தபோது 2 மின்சார ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசம்

மங்களூரு அருகே, சார்ஜிங் செய்தபோது 2 மின்சார ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2022-08-21 15:07 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே போளூர் பகுதியை சேர்ந்தவர் ஹரே கிருஷ்ணா. பால் வியாபாரியான இவருக்கு சொந்தமாக 4 மின்சார ஸ்கூட்டா்கள் இருந்தன. இந்த நிலையில் தனது 4 மின்சார ஸ்கூட்டர்களையும் அவர் சார்ஜிங் செய்தார்.

அப்போது திடீரென அந்த 4 ஸ்கூட்டர்களில் 2 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ, அருகில் இருந்த மற்ற 2 மின்சார ஸ்கூட்டர்களுக்கும் பரவ தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மற்ற 2 ஸ்கூட்டர்களுக்கும் தீ பரவாமல் தடுத்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆனாலும் அதற்குள் மின்சார ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதுகுறித்து பார்கே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்