5 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்...?

ரம்யா படம் வைக்கவும் வருகிறீர்கள் இதற்கு முன்பு 5 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்...? என்று பா.ஜனதா வேட்பாளரிடம் கிராம மக்கள் சரமாரி கேள்வி எழும்பியுள்ளனர்.

Update: 2023-04-27 21:49 GMT

விஜயாப்புரா:

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் கொடிகளும், தோரணங்களும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரமுமாக காட்சி அளிக்கின்றன. கடந்த முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி தங்களது தொகுதி பக்கம் வராத சில எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கு சேகரிக்க வரும் சமயத்தில் மக்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். அதுபோல் ஒரு சம்பவம் விஜயாப்புரா மாவட்டம் தேவரஹிப்பரகி தொகுதியில் நடந்துள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஏ.எஸ்.பட்டீல். பா.ஜனதாவை சேர்ந்த இவர் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தனது தொகுதிக்குஉட்பட்ட சாசனூர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், அவரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அதாவது, 5 ஆண்டுகளாக நீங்கள் தான் எம்.எல்.ஏ.வாக இருந்தீர்கள். அப்போது எங்களது கிராமத்திற்கு ஒரு முறை கூட வரவில்லை. வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. இப்போது மீண்டும் ஓட்டு கேட்டு வந்துள்ளீர்கள். 5 ஆண்டுகளாக நீங்கள் எங்கேசென்றீர்கள் என சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர் கேள்விட்ட கேட்டவர்களுக்கு பதில் அளிக்க முயன்றார். இருப்பினும் கிராம மக்கள் அவரை பேச விடாமல் கோஷம் எழுப்பினர். இதனால் பொதுமக்களுக்கும், அவருடன் வந்த பா.ஜனதாவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்