மேற்கு வங்காளம்: விஷ சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு; 20 பேருக்கு தீவிர சிகிச்சை
மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹவுரா,
மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் நேற்றிரவு விஷ சாராயம் என தெரியாமல் அதனை பலர் குடித்துள்ளனர். இதன் பின்பு, வீட்டுக்கு சென்ற அவர்களில் பலருக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்பு 6 உயர்ந்து உள்ளது. இது தவிர, 20 பேர் டி.எல். ஜெய்ஸ்வால் மருத்துவமனை மற்றும் ஹவுரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் இருந்து குறைந்த தொலைவிலேயே தடை செய்யப்பட்ட சாராய விற்பனையில் சிலர் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.