"இந்திய பெருங்கடலில் சீன கப்பல்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது" - இந்திய கடற்படை தளபதி

சீன கப்பல்களின் அனைத்து செயல்பாடுகளையும் தீவிரமாக கவனித்து வருவதாக இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-03 10:15 GMT

புதுடெல்லி,

இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவுக்கப்பல்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், சீன கப்பல்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது;-

"இந்திய பெருங்கடல் பகுதியில் பல சீனக் கப்பல்கள் இயங்குகின்றன. அதில் குறிப்பாக சீன மீன்பிடிக் கப்பல்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அந்த கப்பல்களின் அனைத்து செயல்பாடுகளையும் நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சுமார் 60 வெளி பிராந்திய சக்திகள் இயங்குகின்றன. அங்கு அதிக அளவு வர்த்தகம் நடைபெறுகிறது. கடல்சார் துறையில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதே எங்கள் நோக்கம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்