வயநாடு நிலச்சரிவு; இழப்பீடு பற்றிய தகவலை வெளியிட்டார் பினராயி விஜயன்

கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இழப்பீடு தொகை பற்றிய தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-07-30 17:21 GMT

வயநாடு,

கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதில், அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர், 4.30 மணியளவில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவை தொடர்ந்து, முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள செய்தியில், முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு கேரள வங்கி முன்பே ரூ.50 லட்சம் தொகையை வழங்கியிருக்கிறது. கொச்சின் சர்வதேச விமான நிலையம் ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவோம் என்று உறுதியளித்து உள்ளது.

தமிழக முதல்-மந்திரி மு.க. ஸ்டாலின், ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார் என்று கூறியுள்ளார். வயநாடு பேரிடரை தொடர்ந்து கேரளாவில் அதிகாரப்பூர்வ முறையில் 2 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்படும்.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த கால கட்டத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்