பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன சிஇஓ சந்திப்பு

பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்து பேசினார்.

Update: 2023-05-14 12:52 GMT

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

டக் மெக்மில்லனுடனான சந்திப்பு, பலனளிக்கும் ஒன்றாக இருந்தது. வெவ்வேறு விஷயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம். முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவெடுத்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். என கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்