விஜயவாடாவில் 30 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல்

விஜயவாடாவில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கழுதை இறைச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-04-08 22:05 GMT

கோப்புப்படம் 

விஜயவாடா,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்கப்படுவதாக பீட்டா அமைப்பினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விஜயவாடாவில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கழுதை இறைச்சியை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். கழுதை இறைச்சியை உட்கொள்வது சட்டவிரோதமானது. இருப்பினும் மூடநம்பிக்கை காரணமாக கழுதைகள் கொல்லப்பட்டு அதன் இறைச்சியை சாப்பிடுவது ஆந்திராவில் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்